×

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையத்தில் வெளியீடு

 

சென்னை: 2026ம் ஆண்டு டெட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.  பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கான முதல் சிறப்பு டெட் தேர்வு ஜூலை 4, 5ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. தற்போது டெட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்படுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: 2026ம் ஆண்டு பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2க்கான தேர்வு ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்ய இயலாதவர்கள் ஜூன் 22 முதல் 30 வரை நடைபெறும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு முகாம் அலுவலர்களை நேரடியாக தொடர்புகொள்ளலாம்.

Tags : Chennai ,Teacher Eligibility Test Board ,
× RELATED நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சேலம்...