மெக்சிகோ: குரூப் கே பிரிவில் உள்ள கொலம்பியா-உச்பெகிஸ்தான் இடையேயான போட்டி மெக்சிகோவில் நடந்தது. ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் கொலம்பியாவின் டேனியல் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் 1-0 என கொலம்பியா அணி முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 2வது பாதியின் 60வது நிமிடத்தில் உஸ்பெகிஸ்தான் அணியின் அப்பொஸ்பெக் பைசுல்லா ஒரு கோல் அடித்து 1-1 என சமனிலைப்படுத்தினார். அடுத்த 5வது நிமிடத்தில் (65 நிமிடம்) கொலம்பியாவின் லூயிஸ் டயாஸ் ஒரு கோல் அடித்து 2-1 என முன்னிலை பெற்றது. கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் 99வது நிமிடத்தில் கொலம்பியாவின் ஜாமிண்டன் காம்பஸ் ஒரு கோல் அடித்தார். இதனால் இறுதியில் கொலம்பியா அணி 3-1 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது.
