×

கோட்டைவிட்ட பனாமா எக்ஸ்ட்ரா டைமில் அசத்திய கானா

டொரொண்டோ: கனடாவின் டொரொண்டோ மைதானத்தில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடந்த போட்டியில், ‘எல்’ பிரிவில் அங்கம் வகிக்கும் கானா மற்றும் பனாமா அணிகள் மோதின. இரு அணிகளும் கோல் அடிக்க வரிந்து கட்டிய நிலையில் முதல் பாதி வரை இரு அணியாலும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. போட்டியின்போது இரு அணிகளுக்கும் தலா இரு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. இதனால், சிவப்பு அட்டை பெற்று விட கூடாது என்று இரு அணி வீரர்கள் சற்று எச்சரிக்கையுடன் விளையாடினர். இந்த பரபரப்பான சூழலில், பனாமா அணிக்கு கோல் அடிக்கும் பெரிய வாய்ப்பு ஒன்று கிடைத்தும் அதை கோலாக மாற்ற பனாமா தவறியது. போட்டியின் முழுநேரம் முடிவு வரை இரு அணிகளும் கோல் அடிக்காததால், 90 நிமிடங்கள் முடிந்த பின்னர் கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. இதனை கானா அணி சரியாக பயன்படுத்தி கொண்டது. அந்த அணியின் காலிப் ஐரென்கி கூடுதல் நேரத்தின் 5வது நிமிடத்தில் கோல் அடித்து அணியை முன்னிலைக்கு கொண்டு சென்றார்.

கூடுதல் நேரத்தின்போது, கோல் அடிக்க முயன்ற பனாமா அணி வீரர் கார்லோஸ் ஹார்வே, கானா கோல் கீப்பரின் மீது மிதித்ததால் அவருக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. ஆட்டத்தின் முடிவில் பனாமா அணி கோல் அடிக்காததால் 1-0 என்ற கோல் கணக்கில் கானா அணி வெற்றி பெற்றது.

Tags : Panama ,Ghana ,Toronto ,Toronto Stadium ,Canada ,
× RELATED ஆப்கனுக்கு எதிரான 2வது ஒருநாள் அபார...