×

கடனாக சரக்கு கேட்டு தாக்கிய போலீஸ்காரர் சஸ்பெண்ட்

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில் உள்ள அரசு மதுபான கடைக்கு கடந்த 15ம் தேதி இரவு வந்த புதுப்பாளையம் காவல் நிலைய போலீஸ்காரர் செந்தில்குமார், கடனாக மதுபாட்டில் கேட்டுள்ளார். அதற்கு அங்கு இருந்த விற்பனையாளர் சங்கர், பணம் தராமல் மதுபானம் தர முடியாது எனக்கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போலீஸ்காரர் செந்தில்குமார், கடைக்குள் புகுந்து சங்கரை சரமாரியாக தாக்கினார். இந்நிலையில், போலீஸ்காரர் செந்தில்குமாரை சஸ்பெண்ட் செய்து எஸ்பி சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Chengam ,Senthilkumar ,Pudupalayam police station ,Kuppanatham village ,Tiruvannamalai district ,Shankar ,
× RELATED ஐஎஸ்ஐ ஆதரவு குழுவுடன் தொடர்பு: டெல்லியில் 5 பேர் கைது