×

ஐஎஸ்ஐ ஆதரவு குழுவுடன் தொடர்பு: டெல்லியில் 5 பேர் கைது

புதுடெல்லி: டெல்லியில் ஐஎஸ்ஐ ஆதரவு தீவிரவாத குழுவுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். டெல்லியில் கடந்த மே 7ம் தேதி ஆபரேஷன் கேங் பஸ்ட் 2.0என்ற பெயரில் காவல்துறையினர் அதிரடி தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். அப்போது பாகிஸ்தானை தளமாக கொண்ட குற்றவாளி ஷாஜத் பாட்டி கும்பலுடன் தொடர்புடைய 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்ட கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. அதனடிப்படையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

Tags : ISI ,Delhi ,New Delhi ,Operation ,Pakistan ,
× RELATED தந்தையை அடித்து கொன்ற மகன்