- வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை மீனாம்பக்கா
- நுங்கம்பாக்கம்
- மதுரை விமான நிலையம்
- திருத்தணி
- Palayankottai
- திருச்சி
சென்னை: தமிழகத்தில் 15 இடங்களில் நேற்று வெயில் சதம் அடித்த நிலையில், இன்றும் தமிழகத்தில் இயல்பை விட வெயில் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், மதுரை விமான நிலையம், திருத்தணி, பாளையங்கோட்டை, திருச்சி, மதுரை, நாகை, கரூர், பரமத்தி, நாமக்கல், கடலூர், வேலுர், ஈரோடு, தஞ்சை ஆகிய பகுதிகளில் வெயில் சதம் அடித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கம் மற்றும் மதுரை விமான நிலையம் ஆகிய பகுதிகளில் 105 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. அதேநேரம், சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் பகுதியில் 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், இன்று தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
