×

₹5 லட்சம் நகை மோசடி வழக்கில் வாலிபர் கைது

விழுப்புரம்,   மார்ச் 8: விழுப்புரம் ரஹூம்லேஅவுட்டைச் சேர்ந்தவர் ரமேஷ். விழுப்புரம் செல்லியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர்   கண்ணன்(43). இருவரும் நகை செய்யும்   தொழிலாளிகள். நகை செய்துகொடுப்பது, வாங்குவது சம்மந்தமாக   இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் 25ம் தேதி நகை   உருப்படி செய்து கொடுப்பதாகக்கூறி ரமேஷிடமிருந்து 68 கிராம் தங்கத்தையும்,   28ம் தேதி 78 கிராம் தங்கம் என மொத்தம் 145.70 கிராம்தங்கத்தை கண்ணன்   பெற்றுக்கொண்டுச் சென்றுள்ளார். ஆனால், பலநாட்களாகியும்   உருப்படி செய்துகொடுக்காமல் கண்ணன் ஏமாற்றி வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து   ரமேஷ், விழுப்புரம் எஸ்பியிடம் புகார்அளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து,   கண்ணன் இரண்டு தவணையாக வாங்கிய தங்கத்தை கொடுப்பதாக 20 ரூபாய் பத்திரத்தில்   எழுதிக்கொடுத்துள்ளார். ஆனால், கண்ணன் கூறியவாறு அந்த தேதியில் தங்கத்தை   கொடுக்காததால், அவரது வீட்டிற்கு சென்று ரமேஷ் கேட்டுள்ளார். அப்போது கண்ணன்,  தங்கத்தை கொடுக்கமுடியாது என்று கூறியதோடு ரமேஷை ஆபாசமாக திட்டி கொலைமிரட்டல்   விடுத்துள்ளார். மோசடி செய்த தங்கத்தின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். இது   குறித்து, ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்   வழக்குபதிவு செய்து கண்ணனை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில்   ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை