×

குழந்தை பாலியல் வன்கொடுமை..அரசு என எதுவும் உள்ளதா? என சந்தேகிக்கும் அளவுக்கு மாநிலத்தில் ஆட்சி நடக்கிறது: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

சென்னை: கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அரசியல் எதுவும் உள்ளதா என சந்தேகிக்கும் அளவுக்கு ஒரு ஆட்சி நடந்துகொண்டு இருப்பதாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; கும்மிடிப்பூண்டியில் சமூகவிரோதிகளால் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முட்புதரில் வீசப்பட்ட செய்தி அறிந்து மனம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது என கூறியுள்ளார்.

அரசு என எதுவும் உள்ளதா என்று சந்தேகிக்கும் அளவுக்கு, இந்த மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. பெண்கள் அனைவரும் தங்களையும், தங்கள் குழந்தைகளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என அறிவுத்தியுள்ளார். ‘பொறுப்பு’ என்னும் சொல்லுக்குப் பொருள் தெரியாதவர்கள் நடத்தும் ஆட்சியில், பொதுமக்களே தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? என கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags : Kanimozhi ,Chennai ,Gummidipoondi ,Tamil Nadu ,
× RELATED அரசு என எதுவும் உள்ளதா? என...