×

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிட்டு உள்ளூர் மக்கள் போராட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் முன்பு உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நூறுக்கணக்கானோர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாலையிலே அனுமதியின்றி திரண்ட மக்கள் கூடங்குளம் அணுமின் நிலைய வாசலில் அமர்ந்து பணிக்கு உள்ளே செல்லும் பணியாளர்களை அனுமதிக்காமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அனுமதியின்றி சாலையில் இந்த போராட்டம் தொடங்கியதால் திருச்செந்தூர்- கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முன்னுரிமை அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்களால் நீண்ட காலமாக முன்வைக்கப்படுகிறது. மத்திய தொழில் பாதுகாப்பு துறையினர், திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினர், கூடங்குளம் காவல் துறையினர் என பல்வேறு தரப்பினரும் அங்கே குவிக்கப்பட்டுள்ளனர். தொழில்நுட்ப பணித் தேர்வில் நிலம் கொடுத்த உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை தரவில்லை என மக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். முன்னுரிமை கொடுக்காததை கண்டித்து அதிகாலையில் இருந்து உள்ளூர் மக்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நீடித்து வருகிறது.

எழுத்து தேர்வில் 10% முன்னுரிமை வழங்கபடும் என தெரிவித்ததாகவும் ஆனால் அந்த 10% முன்னுரிமை கூட வழங்கபடவில்லை என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அணுமின் நிலைய நிர்வாகத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பி முற்றுகையிட்டு வருகின்றனர். இந்த போராட்டம் தீவிரமடைந்து கூடங்குளம் காவல் நிலைய ஆய்வாளர் வருண் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Kudankulam ,Nuclear Power Plant ,Tirunelveli district ,Tirunelveli ,Kudankulam Nuclear Power Plant ,Kudankulam Nuclear Power Plant… ,
× RELATED ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழ்நாடு...