×

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 214 கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனம்: தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 214 கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனத்திற்கு தகுதியான விண்ணப்பிக்கங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கை:
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள 214 கோயில்களுக்கு பரம்பரை முறைவழிசாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறங்காவலர் நியமன அறிவிப்பு அறங்காவலர் நியமனம் செய்யப்படவுள்ள கோயில்கள் விவரம், தகுதிகள், விண்ணப்ப படிவம் ஆகியவை www.hrce.tn.gov.in என்ற துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அறங்காவலர் நியமனம் தொடர்பான விண்ணப்பங்களை இணையவழியில் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை மேற்கண்ட இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம் அல்லது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் நேரிலோ அல்லது விரைவஞ்சல் மூலமாகவோ சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 22.7.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Department of Endowments ,Chennai ,Department of Hindu Religious Endowments ,Department of Hindu Religious Endowments… ,
× RELATED முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு நாளை விசாரணை!