×

ரவுடிகளிடம் லஞ்சம் வாங்கிய 2 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

சென்னை: ரவுடிகளிடம் லஞ்சம் வாங்கிய 2 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் காவல் நிலையத்தில் சட்டம், ஒழுங்கு மற்றும் குற்ற பிரிவுகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகின்றனர். மணிமங்கலம் காவல் நிலையம், தாம்பரம் காவல் ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது, மணிமங்கலம் காவல் நிலையத்தில் ரைட்டராக வேலை செய்து வந்த கோபி மற்றும் சிறப்பு குற்ற பிரிவில் வேலை செய்து வந்த மகேஷ் ஆகிய இருவரும், ரவுகளுடன் தொடர்பில் இருந்து கொண்டு போலீஸ் ரகசியங்களை ரவுடிகளுக்கு பரிமாறி வந்துள்ளனர். மேலும், ரவுகளிடம் தொடர்ந்து மாமூல் வசூலித்துள்ளனர்.

இந்த இரண்டு காவலர்கள் மீதும் தொடர்ந்து, தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனருக்கு புகார்கள் சென்றுள்ளன. அதன்பேரில், தாம்பரம் கமிஷனர் சஞ்சய் குமார் உத்தரவின் பேரில் போலீஸ் அதிகாரிகள், குற்றச்சாட்டுக்கு உள்ளான 2 காவலர்கள் மீதும் விசாரணை நடத்தினர். இதில் கோபி, மகேஷ் ஆகிய இருவரும் ரவுடிகளுடன் தொடர்பில் இருந்து வருவதுடன் அடிக்கடி, ரவுடிகளிடம் இருந்து பணம் பெற்றது தெரியவந்தது. அதன்பேரில் 2 பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து தாம்பரம் கமிஷனர் சஞ்சய் குமார் உத்தரவிட்டார். மேலும் இதனை கண்காணித்து தடுக்க தவறிய மணிமங்கலம் இன்ஸ்பெக்டர் நெடுமாறனுக்கும் எச்சரிக்கை விடுத்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags : Chennai ,Manimangalam police station ,Kanchipuram district ,Tambaram police… ,
× RELATED முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு நாளை விசாரணை!