×

தாம்பரம் எக்ஸ்பிரஸ் இன்ஜினில் திடீர் கோளாறு: பயணிகள் அவதி

சென்னை: தாம்பரம்- போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினில் நேற்று திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால் நீடாமங்கலத்தில் 2 மணி நேரம் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தாம்பரம்- போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றுமுன்தினம் இரவு 10.30 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டது. நேற்று அதிகாலை 4.45 மணி அளவில் நீடாமங்கலம் வந்தது. அப்போது திடீரென இன்ஜின் கோளாறு காரணமாக நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் அந்த ரயில் நிறுத்தப்பட்டது. கோளாறு சரிசெய்யப்பட்டு காலை 6.45 மணியளவில் போடிநாயக்கனூர் புறப்பட்டு சென்றது. 2 மணி நேரம் ரயில் நீடாமங்கலத்தில் நின்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Tags : Chennai ,Needamangalam ,
× RELATED முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு நாளை விசாரணை!