மூன்று சக்கர சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி

பட்டுக்கோட்டை, ஜூன். 13: கலைஞரின் 103வது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டை நகர திமுக சார்பில் முதியவருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி காசாங்குளம் பகுதியில் உள்ள நகர திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. பட்டுக்கோட்டை 19வது வார்டு நகராட்சி கவுன்சிலர் ரவிக்குமார் பரிந்துரையின் பேரில் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த காளிமுத்து என்ற முதியவருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது.

நகர திமுக செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் நகராட்சித் தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார், நகர திமுக செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு முதியவர் காளிமுத்துவிற்கு மூன்று சக்கர சைக்கிளை வழங்கினார். இதில், நகர திமுக அவைத் தலைவர் ஸ்ரீதர், மாவட்ட பிரதிநிதிகள் தனபால், பாண்டியன், நகர துணை செயலாளர் ராமகிருஷ்ணன், நகராட்சி கவுன்சிலர் குமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: