விபத்தில் காயமடைந்தவர்களை மீட்ட முன்னாள் அமைச்சர்

திருவிடைமருதூர், ஜூன் 13: மயிலாடுதுறை மாவட்டம் வானாதிராஜபுரம் கடலங்குடி பகுதியை சேர்ந்தவர் தாமரைச்செல்வன் மகன் அருண்குமார். இவர் கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் கோவிந்தபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தபோது, ஆடுதுறை நீர்வள ஆதாரத்துறையில் பாசன பிரிவு பணி ஆய்வாளராக பணியாற்றும் பாலச்சந்தர் என்பவர் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற போது இரண்டு வாகனங்களும் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காயமடைந்த இருவரையும் அவ்வழியாக வந்த முன்னாள் அமைச்சரும் திருவிடைமருதூர் எம்எல்ஏவுமான கோவி. செழியன், அப்பகுதி மக்களுடன் இணைந்து மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து திருவிடைமருதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Related Stories: