குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

இலுப்பூர், ஜூன் 13: அன்னவாசல் அருகே உள்ள புல்வயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளர் அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில் முருகன் தலைமையில் உறுதிமொழி வாசித்தார்.

இதில் இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை
என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும்,

குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமார உறுதி கூறுகிறேன் என உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் 150 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

 

Related Stories: