×

இளம் வயதில் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா இசை உருவாக்கிய லிடியன் நாதஸ்வரத்துக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு

சென்னை: இளம் வயதில் ஒரிஜினல் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா இசை உருவாக்கிய இசை கலைஞர் லிடியன் நாதஸ்வரத்துக்கு தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உலகின் மிகச் சிறந்த இசைக்குழுவான லண்டன் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா குழுவின், இசைக்கலைஞர்களை கொண்டு இளம் வயதில் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ராவை, லிடியன் நாதஸ்வரம் உருவாக்கி உள்ளார். அதனை முடிந்து கொண்டு, நேற்று அதிகாலை விமானம் மூலம் சென்னை திரும்பினார். அவரை தமிழக அரசு சார்பாக அமைச்சர்கள் ராஜ்மோகன், வன்னியரசு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவேற்றனர்.

ஜூன் 21ம் தேதி உலக இசை தினம் அன்று, சென்னையில் லிடியன் நாதஸ்வரன் உருவாக்கி உள்ள, ஒரிஜினல் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா இசை ஆடியோ வெளியிடப்பட உள்ளது. அதன் பிறகு விரைவில், லண்டனில் உள்ள உலக புகழ் பெற்ற ராயல் ஆல்பெர்ட் ஹாலில் ஒரிஜினல் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா நேரலை அரங்கேற்றப்பட உள்ளது. சென்னை விமான நிலையத்தில் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

சென்னையில் தான் நான் பிறந்து வளர்ந்து, இசையை கற்றுக்கொண்டேன். லண்டன் சிம்போனி ஆர்க்கெஸ்ட்ரா குழுவினருடன், எனது ஒரிஜினல் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா உருவாக்கி உள்ளேன். ஜூன் 21ம் தேதி உலக இசை தினத்தன்று, சென்னை மியூசிக் அகாடமியில் நான் உருவாக்கி உள்ள இசை வெளியாக உள்ளது. இளையராஜா இடம் நான் இசை கற்றுக்கொண்டேன். அனைவரும் அவரது இசை மாணவர்கள். சிம்பொனியை தொடங்கி வைத்தவர் இளையராஜா. அவரது பாதையை நாங்கள் தொடர வேண்டும், என்றார்.

Tags : Lydian Nathaswaram ,Tamil Nadu government ,Chennai ,London Symphony Orchestra ,
× RELATED 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்