- திருவள்ளூர்
- திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு துறை அலுவலர்கள்
- காஞ்சிபுரம்
- மத்திய கூட்டுறவு வங்கி
- திருவள்ளூர்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை கணினிமயமாக்கலுக்கு கொண்டு வருதல் தொடர்பான `நிறுவன வள திட்டமிடல்’ பயிற்சி, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி திருவள்ளூர் கிளையில் 9ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறவுள்ளது.
முதல் நாள் பயிற்சியினை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பா.ஜெய தொடங்கி வைத்தார். நிகழ்வில் துணைப்பதிவாளர் மற்றும் பணியாளர் அலுவலர் மங்கள் தாஸ், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் பாலாஜி, கூட்டுறவுத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
