திருத்துறைப்பூண்டி, ஜூன் 11: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வேதாரண்யம் சாலை செங்காதலை பாலம் அருகில் உள்ள மரக்கிளை இடையேமேல் செல்லும் மின்கம்பிகள் ஆபத்தான நிலையில் உரசிகிறது. மேலும் காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நிற்பார்கள். இதை இல்லாமல் எந்த நேரமும் பொதுமக்கள் பேருந்துக்காக நிற்கிறார்கள். எனவே மின்கம்பிகள் உரசி செல்வதை சீரமைக்க வேண்டும் என அப்பகுதியை பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
