கோவிலூர் பெண்கள் பள்ளியில் 10, 12ம் வகுப்பு மாணவிகளுக்கு பாராட்டு

முத்துப்பேட்டை, ஜூன் 11: முத்துப்பேட்டை கோவிலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமையாசிரியர் வனிதா தலைமை வகித்தார். இதில் பள்ளிச்செயலரும், திருவாரூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையருமான வீரபாண்டியன், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

அப்போது அவர் பேசுகையில், மாணவி அனைவரும் நன்றாக படித்து வரும் ஆண்டு பொது தேர்வில் மாவட்ட அளவில் மாநில அளவில் அதிக மதிப்பெண் எடுக்க முயற்சி செய்ய வேண்டும். தாங்களுக்கு வேண்டிய வசதிகளை கூறுங்கள், பள்ளிக்கு எந்த ஒரு வசதி தேவைப்படாலும் சொல்லுங்கள், அதனை செய்து கொடுக்கிறோம் என்றார். நிகழ்ச்சியில், திருத்துறைப்பூண்டி இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

 

Related Stories: