இணையத்தில் மட்டுமே அனுமதி வெடிபொருள் உற்பத்தி உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

திருவாரூர், ஜூன் 11: திருவாரூர் மாவட்டத்தில் வெடிபொருள் உற்பத்தி உரிமம் பெறுவதற்கு இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டத்தில் வெடிபொருள் சட்டம் – 1884 மற்றும் விதிகள் வெடிபொருள் உற்பத்தி உரிமம், வெடிபொருள் சில்லரை விற்பனை உரிமம், வெடிபொருள் சில்லரை விற்பனை உரிமம் புதுப்பித்தல் மற்றும் பெட்ரோலியம் சட்டம் -1934 மற்றும் விதிகள் பெட்ரோல் டீசல் சில்லரை விற்பனை உரிமங்கள் ஆகிய சேவைகளுக்கான விண்ணப்பங்கள் இணையவழி மூலம் மட்டுமே பெறப்படும். எனவே, விண்ணப்பத்தாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை எல்.எஸ்.டி.ஏ போர்டல் இணையதளம் மூலம் மட்டும் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: