பொது விநியோக திட்டத்தில் குறைகள் இருப்பின் தெரிவிக்கலாம்

தஞ்சாவூர், ஜூன் 11: தஞ்சை கலெக்டர் ரேவதி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பொது விநியோக திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதனை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கும், ஒவ்வொரு மாதமும் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் பொது விநியோகத்திட்டம் தொடர்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி ஜூன் 2026 மாதத்திற்கான பொதுவிநியோகத்திட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 13.6.2026 சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களுக்கு குறைகள் ஏதும் இருப்பின் தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்கள் அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: