திருக்காட்டுப்பள்ளி, ஜூன் 11: திருக்காட்டுப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாகவே எப்போது மின்சாரம் வரும், போகும் என தெரியாத அவல நிலை நிலவி வருகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளும், பணிக்கு செல்வோரும், வீட்டில் வேலை செய்பவர்களும், கடை வியாபாரிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கடந்த ஆட்சியில் இதுபோன்ற பிரச்சனை இல்லாத நிலையில் தற்போதைய ஆட்சியில் எப்போது மின்சாரம் வரும் என்று தெரியாத நிலை இருந்து வருகிறது. எனவே, தொடர் மின்வெட்டை சரிசெய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
