பொன்னமராவதியில் தி.க. பொதுக்கூட்டம்

பொன்னமராவதி, ஜூன் 11: பொன்னமராவதியில் திராவிடர் கழகம் சார்பில் முத்தமிழறிஞர்கலைஞரின் 103வது பிறந்தநாளையொட்டி திராவிடர் எழுச்சிநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொன்னமராவதி பேருந்துநிலையம் அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு திராவிடர்கழக ஒன்றிய செயலர் மாவலி தலைமைவகித்தார். மாவட்டத் தலைவர் அறிவொளி, பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் சரவணன், மாவட்ட இணைச்செயலர் ஆசைத்தம்பி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் திராவிடர் கழக தலைமைக்கழக பேச்சாளர் வழக்கறிஞர் பூவை.புலிகேசி சிறப்புரையாற்றினார். திமுக நிர்வாகி ஆலவயல் முரளிசுப்பையா, தேனூர்சின்னையா, சுரேஷ்பாண்டியன், லோகநாதன், சிபிஎம் ஒன்றிய செயலர்பக்ரூதீன் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். முடிவில் திராவிடர் கழக ஒன்றிய துணைத் தலைவர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

 

Related Stories: