×

காவல் நிலையத்தில் இருந்து குற்றவாளி தப்பி ஓட்டம்

சென்னை: கே.கே.நகர் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த வழக்கில் சாலிகிராமம் விஜயராகவபுரம் பகுதியை சேர்ந்த திவாகர்(21) என்பவரை நேற்று முன்தினம் போலீசார் முன்தினம் கைது செய்தனர். பின்னர் திவாகரை கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அமரவைத்திருந்தனர். அப்போது போலீசார் மற்ற பணிகளை பார்த்து கொண்டிருந்தபோது, திவாகர் தப்பி ஓடிவிட்டார்.

இதை சற்றும் எதிர்ப்பார்க்காத போலீசார் கைதியை பின் தொடர்ந்து ஓடியுள்ளனர். ஆனால் அவர் மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த தகவல் உயர் போலீசார் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அதிகாரிகள் உத்தரவுப்படி போலீசார் தப்பி ஓடிய கைதி திவாகரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். மேலும், காவல் நிலையத்தில் இருந்து கைதி தப்பி ஓடும்போது கவனக்குறைவாக பணியில் இருந்து காவலர்கள் மீது உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Chennai ,K. K. ,MUNDINAM POLICE ,DIWAKAR ,SALIGRAMAM ,VIJAYARAGAPURAM AREA ,NAGAR AREA ,Divagari K. K. ,Nagar police station ,
× RELATED பிரியாணியில் இறந்துபோன பூரான்...