×

கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளில் போலீசார் நடை ரோந்து

அண்ணாநகர்: கோயம்பேடு காய்கறி, கனி மற்றும் மலர் மார்க்கெட் பகுதிகளில் குற்றச் செயல்களைத் தடுக்கும் பொருட்டு, கோயம்பேடு காவல் மாவட்ட சரகத்திற்கு உட்பட்ட மதுரவாயல், வானகரம், விருகம்பாக்கம், கோயம்பேடு கே-10 மற்றும் கே-11 ஆகிய காவல் நிலையங்களைச் சேர்ந்த போலீசார் மார்க்கெட் பகுதி முழுவதும் நடந்தபடியே நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். கோயம்பேடு உதவி ஆணையர் சரவணன் மற்றும் விருகம்பாக்கம் உதவி ஆணையர் பாஸ்கர் ஆகியோர் தலைமையில் 70க்கும் மேற்பட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இந்த அதிரடி சோதனையின்போது மார்க்கெட் பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 30 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித் திரிந்த சில நபர்களைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த நேரடி ரோந்து நடவடிக்கைக்கு அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Tags : Koyambedu ,Annanagar ,Maduravoyal ,Vanagaram ,Virugambakkam ,K-10 ,K-11 ,
× RELATED பிரியாணியில் இறந்துபோன பூரான்...