தலைமைச் செயலக பகுதியில் ரசாயன புகை பரவியது குறித்து சென்னை துறைமுகம், ஆட்சியர் விளக்கம் தர பசுமைத் தீர்ப்பாயம் ஆணை

சென்னை: தலைமைச் செயலக பகுதியில் ரசாயன புகை பரவியது குறித்து சென்னை துறைமுகம், ஆட்சியர் விளக்கம் தர பசுமைத் தீர்ப்பாயம் ஆணையிட்டுள்ளது.

கடந்த 2ம் தேதி முற்பகல் 12 மணியளவில் திடீரென சென்னை காமராஜர் சாலை மற்றும் தலைமை செயலகத்திற்கு எதிரே உள்ள பகுதிகளில் வெள்ளை நிற புகை பரவியது. இதன் காரணமாக தலைமை செயலகம், ரிசர்வ் வங்கி மற்றும் உயர்நீதிமன்ற பகுதிகளில் காற்று மாசடைந்து, பொதுமக்கள் மற்றும் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு இருமல், கண்ணெரிச்சல், சுவாச கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டது.

சென்னை துறைமுக வளாகத்தில் கொட்டப்பட்ட கந்தகம் கோடை வெயில் காரணமாக வேதியியல் மாற்றமடைந்து தீப்பிடித்ததாலும், அங்கிருந்த கண்டெய்னரில் ஏற்பட்ட கசிவு காரணமாகவும் நச்சு வாயு காற்றில் பறந்தது என தெரியவந்தது. சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வாயு கட்டுப்படுத்தப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக நாளிதழ்களில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக வந்து வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை உறுப்பினர் அமர்வு, வாயு காற்றில் பறந்தது குறித்து சென்னை துறைமுகம், ஆட்சியர் விளக்கம் தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Related Stories: