×

உலகக்கோப்பை கால்பந்து; மைதானத்தில் சரிந்து விழுந்த டென்மார்க் நட்சத்திர வீரர்

 

ஓடென்ஸ்: டென்மார்க் அணியை சேர்ந்தவர் கால்பந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன். 2026 பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ஜூன் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அனைத்தும் அணிகள் நட்பு போட்டிகளில் பங்கேற்று வருகிறது. அதன்படி, உக்ரைன்-டென்மார்க் இடையே நட்பு போட்டி ஓடென்ஸில் நடந்தது. இந்த ஆட்டத்தின் 65வது நிமிடத்தில் டென்மார்க்கின் எரிக்சன் திடீரென சரிந்து விழுந்தார். அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. பின்னர் அவர் ஆம்புலன்ஸை மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் சுயநினைவுடன் நலமாக இருப்பதாக அணி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

எரிக்சன் சரிந்து விழுந்ததால் டென்மார்க்-உக்ரைன் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. 2021ம் ஆண்டு நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பின்போது மைதானத்தில் எரிக்சனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டு அவரது உயிர் காக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, சில நாட்களில் உலகக்கோப்பை தொடங்க உள்ள நிலையில், மீண்டும் அவர் மைதானத்தில் சரிந்தது விழுந்தது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

 

Tags : World Cup Football ,Odense ,Christian Eriksen ,2026 FIFA World Cup football ,Ukraine ,Denmark ,
× RELATED சூர்யவன்ஷி மீது எதிர்பார்ப்புகளின்...