×

20 ஆயிரம் டாலர் மதிப்புள்ளதால் மோடி பரிசளித்த வைரத்தை பயன்படுத்தாத ஜில் பைடன்: அமெரிக்க கருவூலத்தில் ஒப்படைப்பு

 

வாஷிங்டன்: கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மோடி, அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். அப்போது அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு (73), பிரதமர் மோடி தனது சொந்த ஊரில் தயாரிக்கப்பட்ட 7.5 கேரட் எடையுள்ள செயற்கை வைரத்தை பரிசாக வழங்கினார். அந்த வைரம் 2,500 அமெரிக்க டாலர் (ரூ.2.4 லட்சம்) மதிப்பிலானது என பிரதமர் மோடி கூறியதுடன், அதற்கான விற்பனை ரசீதையும் வழங்கியிருந்தார். தற்போது தனது சுயசரிதையான ‘வியூ பிரம் தி ஈஸ்ட் விங்’ புத்தகத்தில் இந்த சம்பவம் குறித்து ஜில் பைடன் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘இந்திய பிரதமர் மோடி எனக்கு பரிசாக அளித்த வைரம் மிகவும் அழகாக இருந்தது. பிரதமர் மோடி 2,500 டாலர் என்று கூறியதால் அதை நானே விலைக்கு வாங்கிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால், அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் அந்த வைரத்தை ஆய்வு செய்தபோது, அதன் மதிப்பு 20,000 டாலர் என தெரியவந்தது. அமெரிக்க சட்டப்படி ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் உள்ள பரிசுகளை சொந்தமாக வைத்திருக்க வேண்டுமானால், அதன் சந்தை மதிப்பை அரசுக்கு செலுத்த வேண்டும். இதனால் அந்த வைரத்தை என்னால் வாங்க முடியாமல் போனது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் மட்டும் அந்த வைரத்தை பயன்படுத்திய ஜில் பைடன், பின்னர் அதனை அமெரிக்க அரசு கருவூலத்திலேயே ஒப்படைத்துள்ளார்.

 

Tags : Jill Biden ,Modi ,US Treasury ,Washington ,US ,President ,
× RELATED நிதி முறைகேட்டில் சிக்கிய...