×

2029 மக்களவைத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும்: இந்தியா கூட்டணிக்கு சஞ்சய் ராவத் அறிவுரை

 

மும்பை: சிவசேனா (உத்தவ் பிரிவு) மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில்,’ பாஜவுக்கு எதிரான இந்தியா கூட்டணி ஒற்றுமையுடன் உள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தியின் தலைமையில் இந்தியா கூட்டணி எதிர்கால உத்தியை முடிவு செய்யும். இந்தியா கூட்டணியின் ஒரே நோக்கம், ஊழல்வாதிகள் மற்றும் மக்களைக் கொள்ளையடிப்பவர்களை அதிகாரத்திலிருந்து அகற்றுவதாகவே இருக்க வேண்டும். அதுவே மக்களின் மனதின் குரல் ஆக இருக்கும் ஒற்றை நோக்கமாகவும் அமைய வேண்டும். இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தியே நாம் 2029 மக்களவைத் தேர்தலைச் சந்திக்க வேண்டும். இதுவே உத்தவ் தாக்கரேவின் நிலைப்பாடாகும்.

2024 மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காதது, இந்தியா கூட்டணியின் தேர்தல் வாய்ப்புகளை ஓரளவுக்குப் பாதித்தது. மேற்கு வங்கத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்த பிறகு எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை திரிணாமுல் காங்கிரஸ் உணர்ந்துகொண்டது. அதே போல் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியுடனான உறவை முறித்துக்கொண்ட திமுக, மீண்டும் இந்தியா கூட்டணியில் இணையும் என்றார்.

 

Tags : PM ,2029 Lok Sabha elections ,Sanjay Raut ,Bharatiya Janata Party ,Mumbai ,Shiv Sena ,Uddhav ,Rajya Sabha ,BJP ,Lok Sabha ,Congress ,Rahul Gandhi.… ,
× RELATED நிதி முறைகேட்டில் சிக்கிய...