×

அண்ணாமலை இயக்கத்தில் இணைந்தோர் எண்ணிக்கை 16 லட்சத்தை கடந்தது: தமிழக பாஜ அதிர்ச்சி

சென்னை: அண்ணாமலை இயக்கத்தில் இணைந்தோர் எண்ணிக்கை நேற்று 16 லட்சத்தை கடந்தது. இதனால், தமிழக பாஜ தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது. தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் அரசியலை கட்சியை தொடங்கியது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு தனது இயக்கத்தில் சேர்வதற்கான இணையதள முகவரியையும் தெரிவித்தார். அதில் உடனடியாக பலரும் சேர தொடங்கினார்கள்.

இந்த நிலையில், நேற்று வரை ஆன்லைன் மூலம் அண்ணாமலை இயக்கத்தில் இணைவோர் எண்ணிக்கை 16 லட்சத்தை கடந்தது. நிமிடத்திற்கு 200, 300 என அடுத்தடுத்து உறுப்பினர்கள் சேர்க்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அவர்களில் பெரும்பாலானவர்கள் பாஜவை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் தமிழக பாஜ மேலிடம் கடும் அதிர்ச்சியடைந்துள்ளது.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைத்தளம் பதிவில், ‘‘வீ தி லீடர்ஸ் இயக்கத்திற்கு நீங்கள் அளித்துள்ள பேராதரவு, பெரும் நெகிழ்ச்சியையும், அதைவிட பெரிய பொறுப்பையும் எனக்கு அளித்திருக்கிறது. இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு தனி மனிதனின் பயணம் அல்ல; நல்ல மாற்றத்தை விரும்பும் நமது மக்களின் கூட்டுப் பயணம்.

மாற்றம் வேண்டும் என்று நம்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலும், நீங்கள் வழங்கியிருக்கும் பேராதரவில் எதிரொலிக்கிறது. உங்கள் நம்பிக்கையை மதித்து, நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் இந்தப் பயணத்தை முன்னெடுப்போம். தமிழகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான இந்தப் பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Tags : Annamalai movement ,Tamil Nadu BJP ,Chennai ,Annamalai ,
× RELATED திருச்செந்தூரை தொடர்ந்து...