×

இந்திய டி.20 கிரிக்கெட் அணி அறிவிப்பு: புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்; அறிமுகமாகிறார் சூர்யவன்ஷி

புதுடெல்லி: அயர்லாந்து, இங்கிலாந்து சுற்றுப்பயணம் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய டி.20 கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் 26, 28ம் தேதிகளில் 2 டி.20 போட்டிகளிலும், இங்கிலாந்திற்கு அடுத்த மாதம் (ஜூலை) சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி.20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளிலும் ஆடவுள்ளது. இதில், அயர்லாந்து, இங்கிலாந்து டி.20 தொடருக்கான இந்திய அணியை நேற்று, பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சாங்கியா, தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் அறிவித்தனர்.

டி.20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனாக இருந்த சூர்யகுமார் யாதவ், நீக்கப்பட்டு புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், இளம் அதிரடி வீரரான சூர்யவன்ஷி அறிமுகமாகிறார். அயர்லாந்து, இங்கிலாந்து தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய டி.20 கிரிக்கெட் அணி: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன் (வி.கீ), இஷான் கிஷன் (வி.கீ), அபிஷேக் சர்மா, ஷிவம் துபே, அக்‌ஷர் பட்டேல், நிதீஷ்குமார் ெரட்டி, வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஸ்னோய், முகமது சிராஜ், ஹர்சித் ராணா, அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், வைபவ் சூர்யவன்ஷி.

ஜப்பானில் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் இந்திய டி.20 அணிக்கும் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து தொடரில் பங்கேற்கும் அதே அணியில், பிரின்ஸ் யாதவ், முகமது சிராஜ் நீக்கப்பட்டு, ஜஸ்பிரித் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளார். 15 பேர் கொண்ட அணி பங்கேற்க வேண்டும் என்பதால் இம்மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் தெரிவித்துள்ளார். இத்தொடர்களுக்கான வீரர்கள் தேர்வில் முந்தைய கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, ரிங்குசிங், சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகிய 4 வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மோசமான பார்ம் காரணமாக அவர்களை தேர்வுக்குழு நீக்கியிருக்கிறது.

Tags : Indian T20 cricket ,Shreyas Iyer ,Suryavanshi ,New Delhi ,Ireland ,England ,Asian Games ,Indian cricket team ,2 T20 ,
× RELATED ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 368 ரன்கள் குவிப்பு