×

15 வயதில் இந்திய அணியில் இடம் சச்சின் சாதனையை முறியடித்த 2கே கிட்ஸ் வைபவ் சூர்யவன்ஷி

இந்திய கிரிக்கெட் அணியில் மிக குறைந்த வயதில் இடம் பிடித்த சாதனையை கிரிகெட்டின் கடவுள் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், தன் வசம் வைத்திருந்தார். அச்சாதனையை இன்றைக்கு இளம் அதிரடி வீரரான வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார். 1989ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான கராச்சி டெஸ்ட் போட்டியில் மிக இளம் வீரராக சச்சின் டெண்டுல்கர் களம் கண்டார். அப்போது அவரது வயது, 16 ஆண்டு 205 நாட்களாகும்.

தற்போது அயர்லாந்து, இங்கிலாந்து தொடர் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய டி.20 அணியில் இடம்பிடித்துள்ள 2கே கிட்ஸ் வைபவ் சூர்யவன்ஷிக்கு வயது 15 ஆண்டு 70 நாட்களாகும். சச்சினை விட குறைந்த வயதில் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள சூர்யவன்ஷியை முன்னாள் வீரர்கள் வாழ்த்தியுள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் தனது அதிரடி ஆட்டத்தால் பிளேஆப் சுற்றுக்கு ராஜஸ்தான் அணியை சூர்யவன்ஷி கொண்டுச் சென்றார். அதிக ரன் குவித்தோருக்கான ஆரஞ்ச் தொப்பியையும் 776 ரன் குவித்து பெற்றார். எவ்வித பயமும், பதற்றமும் இன்றி பந்துகளை எதிர்கொள்ளும் சூர்யவன்ஷி, சிக்சரும், பவுண்டரிகளுமாக பறக்கவிடுகிறார்.

Tags : Vaibhav Suryavanshi ,Sachin Tendulkar ,God ,cricket team ,Karachi ,Pakistan… ,
× RELATED ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 368 ரன்கள் குவிப்பு