ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட மேடை திறப்பு விழா சேதுபாவாசத்திரம் அருகே எம்எல்ஏ திறந்து வைத்தார்

பேராவூரணி, ஜூன்.6: சேதுபாவாசத்திரம் ஒன்றியம், இரண்டாம்புளிக்காடு ஊராட்சி, காத்தாயி அம்மன், வால் முனீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்கள் அமைந்திருக்கும் கோயில் இடத்தில், பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட விழா மேடை திறப்பு விழா நடைபெற்றது. எம்எல்ஏ அசோக்குமார் ரிப்பன் வெட்டி, குத்து விளக்கேற்றி, விழா மேடையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றியச் செயலாளர் முத்துமாணிக்கம், வடக்கு ஒன்றியச் செயலாளர் ஞானப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் வளர்மதி நாகராஜன், கணேசன், மாவட்ட பிரதிநிதி விஜயகுமார், திமுக நிர்வாகிகள் சித்திரன், முருகேசன், மூர்த்தி, பட்டுக்கோட்டை நகர்மன்ற உறுப்பினர் ரவிக்குமார், ஊராட்சி செயலர் மதிவாணன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: