×

தமிழக சட்டப்பேரவை 18ம் தேதி கூடுகிறது: ஆளுநர் அர்லேகர் உரையாற்றுகிறார்

 

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற 18ம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் தமிழக ஆளுநர் அர்லேகர் உரையாற்றுகிறார். தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் தவெக வெற்றி பெற்று முதல்வர் விஜய் தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது. ஆட்சிக்கு வந்ததையடுத்து அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடந்தது. இதையடுத்து இந்த ஆண்டுக்கான பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. முன்னதாக தமிழக ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும்.

அதன்படி வருகிற 18ம் தேதி சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழக சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று கூறும்போது, ”தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் கூட்டம் வருகிற 18ம் தேதி (வியாழன்) காலை 10 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் கூடும். அப்போது, தமிழ்நாடு ஆளுநர் உரை நிகழ்த்த உள்ளார்” என்றார். இந்த கூட்டம் 3 நாட்கள் நடைபெற வாய்ப்புள்ளது.

Tags : Tamil Nadu Legislative Assembly ,Governor ,Arlekar ,Chennai ,Tamil ,Nadu ,Governor Arlekar ,Chief Minister ,Vijay ,Tamil Nadu ,
× RELATED காயிதே மில்லத்தின் 131-வது பிறந்தநாளை...