அறந்தாங்கியில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு

அறந்தாங்கி, ஜூன் 4: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் கோடை வெயில் தாக்கம் அதிக அளவில் இருப்பதால் தண்ணீர் தட்டுபாடு அதிகரித்த்துள்ளது. அறந்தாங்கி சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் தாக்கம் அதிக அளவில் உள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் சென்று வர அவதிப்பட்டு வருகின்றனர். அந்த அளவிற்க்கு வெயில் தாக்கம் இருந்து வருகிறது.

இந்த வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் தட்டுபாடு அதிகரித்து உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த வருடம் பருவ மழை பொதுமானதாக இல்லை இதனால் நிலத்தடி நீர்மட்டம் கீழே சென்று கொண்டு போகிறது. இதனால் அறந்தாங்கி ஆவுடையார்கோவில் ஊராட்சி உள்ளிட்ட ஒன்றியங்களில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் அளவு குறைந்து விட்டது. இதனால் பொதுமக்களுக்கு தண்ணீர் சப்பளை முறை வழங்க முடியாமல் நிர்வாகம் தடுமாறி வருகிறது.

இதனால் அப்பகுதி பொதுமக்கள் தண்ணீருக்கு அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் தண்ணீர் பற்றாகுறையை சமாளிக்க பொதுமக்கள் சரக்கு வாகனங்களில் விற்கப்படும் தண்ணீரை ஒரு குடம் 12 ரூபாய் முதல் 15 ரூபாய் வரையில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை போக்கி தடையில்லாமல் போதுமான தண்ணீர் வழங்க சம்மந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

 

Related Stories: