×

ராணிப்பேட்டையில் தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: பெண்கள் ஒப்பாரி

 

ராணிப்பேட்டை: விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய விஜய் அரசைக் கண்டித்து ராணிப்பேட்டையில் விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பெண்கள் ஒப்பாரி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிறுத்தம் அருகே தமிழக விவசாயிகள் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் உதயகுமார் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் சுபாஷ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில், விவசாயிகள் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதாக தேர்தல் வாக்குறுதி அளித்து, வாக்குகளை பெற்று வெற்றி பெற்றவுடன், விவசாயிகளை ஏமாற்றும் தவெக அரசை கண்டித்து விவசாயிகள், பெண்கள் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் விவசாயிகள் சங்க ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : Tamil government ,Ranipetta ,Vijay government ,Cori Ranipet ,Murtukadai ,
× RELATED திண்டிவனத்தில் விஜய் மூடுவதாக...