×

சாம்பியன் பட்டத்துடன் ரூ.20 கோடி அள்ளிய ஆர்சிபி

 

அகமதாபாத்: ஐபிஎல் டி 20 இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ரூ.20 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஐபிஎல் டி 20 இறுதிப் போட்டிக்குப் பிறகு வழங்கப்படும் பரிசுத்தொகைதான் தற்போது ‘ஹாட் டாபிக்’ ஆக உள்ளது. இந்த ஆண்டு டாப் 4 இடங்களை பிடித்த அணிகளுக்கு மொத்தமாக சுமார் ரூ.46.5 கோடி பரிசுத்தொகையை பிசிசிஐ ஒதுக்கியது. அதன்படி சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ ரூ.20 கோடி பரிசுத்தொகையை வழங்கியுள்ளது.

இந்தத் தொடரில் ரன்னர் அப் இடத்தைப் இடத்தைப் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ரூ.12.50 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது. மேலும், பிளேஆப் சுற்றுக்குத் தகுதி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த மற்ற இரு அணிகளுக்கும் பிசிசிஐ ரொக்கப் பரிசுகளை வழங்கியுள்ளது. அதன்படி, குவாலிபையர் 2 போட்டியில் தோல்வியடைந்து மூன்றாவது இடத்தைப் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரூ.7 கோடியும், எலிமினேட்டர் போட்டியில் தோற்று நான்காவது இடத்துடன் வெளியேறிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு ரூ.6.50 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

அணிகளுக்கு மட்டுமல்ல, ஆரஞ்சு கேப், பர்பிள் கேப், ‘மோஸ்ட் வேல்யூபிள் பிளேயர்’ போன்ற தனிநபர் விருது வென்ற வீரர்களுக்கும் தலா ₹10 லட்சம் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

Tags : RCB ,Ahmedabad ,Royal Challengers Bangalore ,IPL T20 ,
× RELATED ஐபிஎல் 2026 இறுதிப் போட்டி முடிந்து...