2026 ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் அணியை அரையிறுதி வரை அழைத்து வந்த பெருமை, அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரரான 15 வயதான (2கே கிட்ஸ்) சூர்யவன்ஷியையே சாரும். ஒவ்வொரு போட்டியிலும் தனது சிக்சர் மழையால், ரன்களை அள்ளிக்குவித்தார். சீசன் முடிவில், 5 விருதுகளை வென்று கிரிக்கெட் ஜாம்பவான்களையும், ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் சூர்யவன்ஷி.
இத்தொடரில் அதிக ரன் (775) குவித்த ஆரஞ்ச் கேப் விருது, அதிக சிக்சர் (72) விளாசிய விருது, மதிப்புமிக்க வீரர் விருது, வளர்ந்து வரும் வீரர் விருது, சூப்பர் ஸ்ட்ரைக்கர் (237.30) விருது என 5 விருதுகளை சூர்யவன்ஷி அள்ளினார். தான் வென்ற 5 கோப்பைகளுடன் மைதானத்தில் அமர்ந்து, உற்சாக போஸ் கொடுத்தார். ஒட்டுமொத்தமாக ரூ.40 லட்சம் பரிசு தொகையையும், டாடா சியரா காரையும் வென்றார்.
