×

மலேசியாவில் 16 வயதிற்கும் உட்பட்டவர்கள் சமூக வலைதளங்கள் உபயோகிக்க தடை

கோலாலம்பூர்: இணைய பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் புதிய ஆன்லைன் பாதுகாப்பு சட்டத்தை மலேசிய அரசு கொண்டுவந்துள்ளது. மலேசியாவில் 8 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட பயனர்களைக் கொண்ட, உரிமம் பெற்ற சமூக வலைதளங்களை 16 வயதிற்கு கீழ் இருக்கும் சிறுவர், சிறுமிகள் பயன்படுத்த ஜூன் 1ஆம் தேதியான இன்று முதல் அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் புதிய கணக்குகளைத் திறக்க தங்களின் my digital id போன்ற அதிகாரபூர்வ அரசாங்க அடையாள ஆவணங்களைச் சமர்ப்பித்து தங்களின் வயதை உறுதிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டது. இதனிடையே இந்த விதிமுறையை புதிய பயனர்கள் மட்டுமில்லாமல் ஏற்கனவே கணக்கு வைத்திருக்கும் தற்போதைய பயனர்களுக்கும் பொருந்தும் என்பதால் அவர்களும் தங்களின் அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும். தவறினால் கணக்குகள் முடக்கப்படலாம்.

இணைய மோசடிகளைத் தடுக்க, விளம்பரதாரர்களும் தங்களின் அடையாளத்தை உறுதிபடுத்திய பிறகு சமூக வலைதளங்களில் கட்டண விளம்பரங்களை வெளியிட அனுமதிக்கப்படுவார்கள்.

 

Tags : Malaysia ,Kuala Lumpur ,Malaysian government ,
× RELATED ரஷ்யாவின் அதிரடி பொருளாதார உத்தி: ஜூன்...