×

மியான்மரில் வெடி விபத்தில் 45 பேர் பலி

பாங்காக்: வடகிழக்கு மியான்மரில் நாம்காம் நகராட்சியில் உள்ள காங்டப் கிராமத்தில் நேற்று பிற்பகலில் ஒரு கட்டிடம் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அங்கு சுரங்கப் பணிகளுக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் 45 பேர் பலியாகினர்.

70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சீன எல்லையிலிருந்து 3 கிமீ தெற்கே அமைந்துள்ள இப்பகுதி மியான்மர் அரசுக்கு எதிராக சண்டையில் ஈடுபட்டு வரும் இன ஆயுத குழுவான டாங் தேசிய விடுதலை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது. வெடிவிபத்தில் அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

Tags : Myanmar ,BANGKOK ,OF KANGDUP ,NAMKHAM MUNICIPALITY ,NORTHEASTERN MYANMAR ,
× RELATED மலேசியாவில் 16 வயதிற்கும் உட்பட்டவர்கள் சமூக வலைதளங்கள் உபயோகிக்க தடை