×

ஈரான் ஒப்பந்தம் குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை: வெள்ளை மாளிகை தகவல்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று முன்தினம் தனது ஆலோசகர்களுடன் கலந்துரையாடினார். தேசிய பாதுகாப்பு உதவியாளர்களுடன் சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டம் எந்த முடிவும் எடுக்கப்படாமல் முடிவடைந்ததாக வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க மற்றும் ஈரானிய பேச்சுவார்த்தையாளர்கள் ஒரு தற்காலிக உடன்பாட்டிற்கு வந்துவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அதிபர் டிரம்ப் இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை உறுதிப்படுத்தினார்.

ஈரானின் சர்ச்சைக்குரிய அணுசக்தித் திட்டம் குறித்து புதிய பேச்சுவார்த்தைகள் நடைபெறும் நிலையில் இந்த ஒப்பந்தம் நிலையற்ற போர் நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிக்கும். தங்களிடம் ஒருபோதும் அணு ஆயுதமோ அல்லது அணுகுண்டோ இருக்காது என்பதை ஈரான் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.

மேலும் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்காக ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்றும் அனைத்து கடல் கண்ணிவெடிகளும் அழிக்கப்பட வேண்டும் என்றும் அதிபர் தெரிவித்துள்ளார். ஈரானின் முக்கிய பேச்சுவார்த்தையாளர் கூறுகையில்,‘‘உத்தரவாதங்கள் அல்லது வார்த்தைகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. செயல்கள் மீது மட்டுமே நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Tags : Iran ,White House ,Washington ,US ,President Donald Trump ,
× RELATED ஆப்கானிஸ்தானில் அகதிகளை ஏற்றிச்...