×

அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி ஈரானுடன் சிறந்த ஒப்பந்தம் முடிவாகும் நிலையில் உள்ளது

வாஷிங்டன்: அமெரிக்காவும் ஈரானும் மிகச்சிறந்த ஒப்பந்தத்தை எட்டும் நிலையில் இருப்பதாக கூறியிருக்கும் அதிபர் டிரம்ப், அணு ஆயுதத்தை உருவாக்கவில்லை என ஈரான் வாக்குறுதி தந்திருப்பதாக கூறி உள்ளார். பாக்ஸ் நியூஸ் சேனலில் தனது மருமகள் லாரா டிரம்புக்கு அதிபர் டிரம்ப் அளித்த பேட்டி நேற்று முன்தினம் ஒளிபரப்பப்பட்டது. அதில் அதிபர் டிரம்ப் கூறியிருப்பதாவது:

நாங்கள் மிகச்சிறந்த ஒப்பந்தத்தை எட்டும் நிலையில் இருக்கிறோம். அவசரப்பட்டால் நல்ல ஒப்பந்தத்தை உருவாக்க முடியாது. அதனால் மெதுவாக இருந்தாலும் உறுதியாக நாங்கள் விரும்புவதை பெற்று வருகிறோம். ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கவில்லை என ஒப்புக் கொண்டுள்ளது.

அதே சமயம் வேறெந்த நாட்டிடம் இருந்தும் ஆயுதங்களை வாங்க மாட்டோம் என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இது ஒரு மிகப்பெரிய மாற்றம். இவ்வாறு கூறி உள்ளார். இதற்கிடையே, இருதரப்பு பேச்சுவார்த்தையாளர்கள் இறுதி செய்த ஒப்பந்தத்தில் அதிபர் டிரம்ப் சில மாற்றங்களை செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : US ,Iran ,Trump ,Washington ,President Trump ,United States ,Box News ,Laura Trump ,
× RELATED மலேசியாவில் 16 வயதிற்கும் உட்பட்டவர்கள் சமூக வலைதளங்கள் உபயோகிக்க தடை