×

முப்படைகளின் தலைமை தளபதி ராஜா சுப்பிரமணி பதவியேற்றார்: தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்

புதுடெல்லி: இந்திய முப்படைகளின் தலைமை தளபதியாக ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்பிரமணி நேற்று பதவியேற்றார். முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த ஜெனரல் அனில் சவுகான் நேற்று ஓய்வு பெற்றார்.இதையடுத்து நாட்டின் புதிய தலைமை தளபதியாக ஜெனரல் ராஜா சுப்பிரமணி நேற்று பதவியேற்று கொண்டார்.

முப்படைகளின் புதிய தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, ராணுவத்தில் பல ஆண்டுகள் களத்தில் நின்று வேலை பார்த்து மிக பெரிய அனுபவம் வாய்ந்தவர். காஷ்மீர், எல்லைப் பகுதிகள் என எல்லை பகுதிகளில் படைகளை வழிநடத்தியுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த ஜெனரல் ராஜா சுப்ரமணி, கடந்த1985-ம் ஆண்டு கர்வால் ரைபிள்ஸ் படையில் தனது பணியை தொடங்கினார்.

காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் வெற்றிகரமாகப் பணியாற்றியுள்ளார். பாகிஸ்தான் எல்லையில் நிலை கொண்டுள்ள ராணுவத்தின் முக்கிய தாக்குதல் பிரிவிற்கு கமாண்டராக இருந்தார். புதிய தலைமை தளபதியாக பொறுப்பேற்ற பின் ராஜா சுப்பிரமணி கூறுகையில்,‘‘நமது ஆயுதப்படைகளில் உள்நாட்டு ஆயுதங்களின் மேம்பாடு, சேர்ப்பு மற்றும் ஒருங்கிணைப்பு துரிதப்படுத்தப்படும்’’ என்றார்.

Tags : Raja Subramani ,Chief of the ,Indian Armed Forces ,Tamil Nadu ,New Delhi ,General ,N.S. Raja Subramani ,Chief of the Indian Armed Forces ,Anil Chauhan ,
× RELATED ஓட்டல் அதிபரை காதலித்து திருமணம்...