×

பெண்களின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை பெண் போலீசிடம் இன்ஸ்பெக்டர் சில்மிஷம்: வேலியே பயிரை மேய்ந்தால்?

உடன்குடி: சிங்கபெண் அதிரடிப்படையில் இடம் பெற்ற பெண் போலீஸ் ஒருவருக்கு அதே காவல்நிலைய இன்ஸ்பெக்டர் அளித்த டார்ச்சர் குறித்து போலீஸ் உயர்அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் புகழ்பெற்ற திருக்கோயிலை நகரமாக கொண்ட சப்டிவிசனுக்குட்பட்டது தியாகிகள் நிறைந்த பூமி. இந்த ஊரில் காவல் நிலையம் உள்ளது.

இங்கு இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என சுமார் 35க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்துவருகின்றனர். இந்த காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் தன்னை ஒரு ‘ஹானஸ்ட் ஆபீசர்’ என தம்பட்டம் அடித்துக் கொண்டே இருப்பார். போலீஸ் உயரதிகாரிகள் போலீஸ் யூனிபார்மில் சமூகவலைதளங்களில் பதிவிடக்கூடாது என உத்தரவிட்ட நிலையிலும் இவர் எதையும் பொருட்படுத்தாமல் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பாராம். சினிமா பாணியில் அதிரடி போலீசாக தன்னை காட்டிக்கொள்வார்.

இந்நிலையில் அந்த காவல்நிலையத்தில் பணிபுரியும் இளம்பெண் போலீஸ் ஒருவருக்கு, அந்த இன்ஸ்பெக்டர் வாட்ஸ் அப் மற்றும் சமூகவலைதளங்கள் மூலம் ஆபாச மேசேஜ் அனுப்பி வந்துள்ளார். ஆனால் அந்த பெண் போலீஸ் எந்த பதிலும் அளிக்காமல் அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். எனினும் தனக்கு மேல் பணிபுரியும் அதிகாரி என்பதால் வேறு வழியின்றி அவர் கூறும் வேலைகளை அவர் செய்து வந்த நிலையில் அந்த பெண் போலீசிடம் தொடர்ந்து அத்துமீறி வந்துள்ளார். இதனால் அவர் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டார்.

கம்ப்யூட்டரில் பணிகளை செய்து வந்த அந்த பெண் போலீஸ், இன்ஸ்ெபக்டருக்கு ஒத்துழைக்காத நிலையில் அவருக்கு மாற்றுப்பணிகள் வழங்கியுள்ளார். தற்போது தமிழ்நாடு அரசின் ‘’சிங்கப்பெண் அதிரடிப்படை’’யில் இந்த பெண் போலீசுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அவரை அந்த பணிக்கு அனுப்பாமல் மாற்றுப்பணிகள் வழங்கி வந்துள்ளார் அந்த அதிகாரி.

அவருடைய டார்ச்சரை தாங்க முடியாத பெண் போலீஸ், இன்ஸ்பெக்டரிடன் ஆபாச மேசேஜ்களை ஸ்கீரின்ஷாட் எடுத்து மாவட்ட எஸ்பி உள்ளிட்ட தனது மேலதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து எடுத்து கூறியுள்ளார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர், பெண் போலீசிடம், உயரதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படையில் பணிபுரியும் போலீசாருக்கே இந்த நிலைமை என்றால் சாமானிய மக்களின் நிலை என்னாகும் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் பாதுகாப்பிற்காக தான் கடந்த 10ம் தேதி தமிழ்நாடு முதல்வராக பதவியேற்ற விஜய் சிங்கப் பெண் அதிரடிப்படை திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதற்காக அவர் பொறுப்பேற்ற முதல்நாளிலேயே கையெழுத்திட்டார். ஆனால் அந்த படையில் நியமிக்கப்பட்ட பெண் போலீசிடமே உயர் அதிகாரி ஒருவர் அத்துமீறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படையில் பணிபுரியும் போலீசாருக்கே இந்த நிலைமை என்றால் சாமானிய மக்களின் நிலை என்னாகும் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது

Tags : Inspector ,Silmisham ,Lion Woman Task Force ,Udangudi ,Thoothukudi ,
× RELATED முன்னேற்பாடு நடவடிக்கைகளில் கடும்...