×

திருச்சுழி அருகே வெடிமருந்து ஆலையில் என்ஐஏ சோதனை

திருச்சுழி:கேரள மாநிலம், கொச்சியில் போலீசார் ஒரு லாரியை சோதனையிட்டதில், குவாரிகளுக்கு பயன்படுத்தப்படும் வெடிபொருளான டெட்டனேட்டர்கள் இருந்தன. தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணையில், அந்த டெட்டனேட்டர்கள் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே அகத்தாகுளத்தில் உள்ள சேலம் ஸ்ரீரெங்கபாளையத்தை சேர்ந்த சந்தோஷ்சிவனுக்கு சொந்தமான வெடிமருந்து ஆலையில் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அங்கு கேரளாவை சேர்ந்த தேசிய புலனாய்வு முகமையின் 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

Tags : NIA ,Tiruchi ,Kochi, Kerala ,National Investigation Agency ,Santhosh Sivan ,Salem Srirengapalayam ,Agathakulam ,Virudhunagar district… ,
× RELATED முன்னேற்பாடு நடவடிக்கைகளில் கடும்...