- நாகப்பட்டினம்
- நிதி அமைச்சர்
- மரியா வில்சன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தமிழ்
- தமிழ்நாடு
- புனித அன்னை
- சுகாதார தேவாலயம்
- வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் மாவட்டம்
நாகப்பட்டினம்: தமிழகத்தின் நிதிநிலை குறித்து 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதாக நிதித்துறை அமைச்சர் மரியவில்சன் தெரிவித்தார். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு நேற்று வந்த தமிழக நிதித்துறை அமைச்சர் மரியவில்சன் அளித்த பேட்டி: தமிழகத்தின் நிதிநிலை குறித்து 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.
இதற்காக நிதித்துறை அமைச்சக அதிகாரிகள், ஊழியர்கள் தீவிர பணியாற்றி வருகின்றனர். வெள்ளை அறிக்கை மூலம் தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து மக்களுக்கு எவ்வித ஒளிவுமறைவின்றி முதல்வர் விஜய் மூலம் தெரிவிக்கப்படும். விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக கடந்த 2024ம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி 45 நாட்களுக்குள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. திமுக ஆட்சி காலத்தின் போது இத்தகைய விதிமுறைகள் இல்லை. எனவே மத்திய ரிசர்வ் வங்கியின் விதிகளை பின்பற்றியே தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரி வித்தார்.
* வடமாநில மகளிருக்கு உரிமைத்தொகையா?
மகளிர் உரிமை தொகை வழங்குவது தொடர்பாக பொதுமக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை என்னிடம் தெரிவித்துள்ளனர். அதில் மகளிர் உரிமைத்தொகை வடமாநிலத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் வழங்கப்பட்டு வருவதாக தெரிகிறது. எனவே முறையீடு தொடர்பாக தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்பாக நிதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது மக்களுக்கு தெரிவிக்கப்படும் என்று அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
