×

குஜராத்தில் பாகிஸ்தான் எல்லை பகுதியில் அமித் ஷா ஆய்வு

புஜ்: குஜராத்தின் கட்ச் பகுதியில் சர்வதேச எல்லையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது, பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு சென்று நேற்று பார்வையிட்டார். எல்லை பாதுகாப்பு படையின் அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார். ஜி-7 எல்லை சாவடியை அவர் திறந்து வைத்தார். இரு நாடுகளின் எல்லையில் உள்ள ஹராமி நல்லா கழிமுக பகுதிக்கு சென்று பார்த்தார்.

அதிகாரிகள் கூறுகையில்,பாதுகாப்புத் தயார்நிலையை வலுப்படுத்துவதையும், பாதுகாப்பு முகமைகளுடனான ஒருங்கிணைப்பை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு அமித் ஷா இந்த பயணத்தை மேற்கொண்டார்.  முன்னதாக அவர் ராஜஸ்தான், பிகானீர் மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையின் அவுட் போஸ்ட்-க்குச் சென்று, பாதுகாப்பு நிலைமைகளை ஆய்வு செய்து, பெண் காவலர்களுக்கான வசதிகளை திறந்து வைத்தார்.

Tags : Amit Shah ,Pakistan ,Gujarat ,Bhuj ,Union Home Minister ,Kutch region of ,Pakistan border ,Border Security Force ,
× RELATED பாஜகவை வீழ்த்த புதிய வியூகம்; ஜூன் 6ல்...