ஒட்டன்சத்திரம் நாகப்பன்பட்டியில் மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா

ஒட்டன்சத்திரம், மே 28: ஒட்டன்சத்திரம் அருகே நாகப்பன்பட்டியில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக சாமி சக்தி அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் கோயிலுக்கு அழைத்து வரப்படும் வைபவம் நடந்தது.

இதில் குழந்தை பாக்கியம், தொழில் வளர்ச்சி, திருமண யோகம், கல்வி உள்ளிட்ட வேண்டுதல் நிறைவேறிய ஆண் மற்றும் பெண் பக்தர்கள் கைகளில் தேங்காயை ஏந்தியபடி சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு அங்கபிரதட்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலேயே இந்த கோயில் திருவிழாவில்தான் அதிக தூரம் அங்கப்பிரதட்சனம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: