×

எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதத்தை பரிசீலனை செய்வது என் வேலை: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

 

சென்னை: சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் முறையாக கொடுத்தால் அதனை பரிசீலனை செய்வது என் வேலை என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறினார். சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களை சந்தித்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறியதாவது: அதிமுக சார்பில் கொடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதத்தை பரிசீலனை செய்யும் அதிகாரம் எனக்கு உள்ளது. அதனை ஆய்வு செய்த பின் ஏற்றுக்கொள்ளப்பட்டது குறித்து அறிவிப்பேன்.

அதிமுக தரப்பில் கூறும் கருத்துகள் அவர்களது சொந்த கருத்து. விதிகளுக்கு உட்பட்டு சபாநாயகர் உரிமையோடு அறிவிப்பேன். சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் முறையாக கொடுத்தால் அதனை பரிசீலனை செய்வது என் வேலை. யாரையும் பழிவாங்கும் இடம் சட்டமன்ற அலுவலகமோ, சபாநாயகர் அலுவலகமோ கிடையாது. யார் மீதும் விருப்பு வெறுப்போ எனக்கு கிடையாது. சட்ட விதிகளுக்கு உட்பட்டே அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க சபாநாயகரின் சட்ட விதிகளின்படியே நடவடிக்கை எடுத்தேன். எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வழங்கிய மனு மீது முறையாக நடவடிக்கை எடுக்க சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளதே தவிர மனுவை ஒதுக்கவில்லை. தவெக அரசுக்கு ஆதரவு கூடுகிறதா குறைகிறதா என்பதை கவனிப்பது எனது வேலை அல்ல, எனது வேலை எண்ணிக்கையை சரி பார்ப்பது மட்டுமே. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Speaker ,J.C.T. Prabhakar ,Chennai ,Chennai Secretariat ,AIADMK… ,
× RELATED வேட்புமனுவில் சொத்து விவரங்களை...