- வரி துறை
- இபிஎஸ்
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- வருமானவரித் துறை
- அஇஅதிமுக
- பொதுச்செயலர்
- எடப்பாடி பழனிசாமி
- எடப்பாடி
- சக்திவேல்…
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வேட்புமனுவில் சொத்து, வருமான விவரங்களை மறைத்தது குறித்து விசாரணை நடத்துமாறு வருமான வரித்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி தொகுதி வாக்காளர் சக்திவேல் பெருமாள் இந்த மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், நிறுவனங்களில் இருந்து அவரது மனைவிக்கு கிடைத்த வருமானம் குறித்த தகவல்களை மறைத்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் கூட்டுக் குடும்ப சொத்தாக இருந்த 3900 சதுர அடி அளவிலான வீடு தற்போதைய வேட்புமனுவில் தனது மனைவியின் பெயரில் மாற்றப்பட்டதை மறைத்துள்ளார்.
நெடுங்குளம் கிராமத்தில் விவசாய நிலத்தை வாங்கியதற்கான நிதி ஆதாரங்களை காட்டவில்லை. கடந்த 2021, 2026ம் ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வேட்புமனுக்களை ஒப்பீடு செய்தால் ஏராளமான முரண்பாடுகள் உள்ளது தெரியவந்துள்ளது. எனவே, உண்மை தகவல்களை மறைத்துள்ளது குறித்து விசாரணை நடத்துமாறு வருமான வரித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
